ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
‛ஜாலி எல்எல்பி' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சுபாஷ் கபூர், அதன் இரண்டாம் பாகமான ஜாலி எல்எல்பி-2 படத்தை இயக்கியுள்ளார். முதல்பாகத்தில் அர்ஷத் வர்சி ஹீரோவாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இருப்பினும் ஒரு கெஸ்ட்ரோலில் அர்ஷத் வர்சி நடித்துள்ளார். தற்போது ஜாலி எல்எல்பி-2 படத்தின் புரொமோஷன் வேலை மும்முரமாய் நடந்து வருகிறது. இப்படத்தில் அர்ஷத் வர்ஷி ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் தன் வழியில் இப்படத்தை புரொமோஷன் செய்து வருவதாக அர்ஷத் கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது... ‛‛அக்ஷ்ய் குமாரை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அவரும், அவரது படக்குழுவும் சிறப்பாக இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, இருந்தாலும் நானும் என் வழியில் படத்தை முடிந்தளவு புரொமோஷன் செய்து வருகிறேன். ஜாலி எல்எல்பி-2 படத்தை காண மிகவும் ஆவலாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.