ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், முன்னணி நடிகர்களான சல்மான் மற்றும் ஷாரூக்கானை பற்றி புகழ்ந்துள்ளார். நேற்றுமுன்தினம் வெளியான ஷாரூக்கானின் ரயீஸ் படத்தில் சன்னி லியோன் ஒரு குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்தப்பாடலுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே நடிகர்கள் சல்மான் மற்றும் ஷாரூக்கான் பற்றி சன்னிலியோன் கூறியிருப்பதாவது... ‛‛சல்மான்கானை சந்தித்தது நல்ல அனுபவம். கிரிக்கெட்டின் போது அவரை ஒருமுறை சந்தித்தேன். எப்போதும் கலகலப்பாக மகிழ்ச்சியாக இருப்பார். ஷாரூக்கான் உடன் பேசியிருக்கிறேன், வியக்கத்தக்க நடிகர் ஷாரூக். மிகவும் மரியாதைக்குரியவர், அவர் படத்தில் நடித்ததை ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்'' என்று கூறியுள்ளார்.