ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபத்தில் வெளியான தங்கல் படம் கொடுத்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமீர்கான். இப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை எட்டியிருக்கிறது. அமீர்கான் அடுத்தப்படியாக ‛தக் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். இதில் அமீருடன், அமிதாப்பச்சனும் நடிக்க உள்ளார். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். சமீபத்தில் அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில் எப்போது நீங்கள் ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமீர், ‛‛எனக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆர்வம் இல்லை. நிறைய வாய்ப்புகள் வருகிறது, ஆனால் எனக்கு ஏற்ற கதை, கேரக்டர் எதுவும் சரியாக அமையவில்லை, எனக்கு இந்திய படங்களே போதும்'' என்று கூறியுள்ளார்.