விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அதிலும் நடிகர் சல்மான் கான் மற்றும் அமீர் கான் உடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர், இயக்குநர் ராகுல் தோலாகிய இயக்கி வரும் ‛ரயீஸ்' படத்தில் ஷாருக்கானுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நவாசுதீன், ஷாருக்குடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதோடு, அவரை புகழவும் செய்தார்.
இதைப்பற்றி நவாசுதீன் கூறியதாவது..." ஷாருக்கான் போன்ற ஒரு சக நடிகரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. அவரை எல்லோரும் சூப்பர் ஸ்டாராகவும், பணக்காரராகவும் தான் பார்க்கிறார்கள். ஆனால் ஷாரூக்கான் மிகவும் எளிமையானவர். சக நடிகர்ளுக்கு எப்போதும் ஆதரவாக உறுதுணையாக இருப்பார். தனது சக நடிகர்களின் நடிப்பை புகழ்வதற்கு யோசிக்கவே மட்டார், அவருடன் நடிக்கும்போது அவருடன் சேர்த்து சகநடிகரையும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று விடுவார்" என்றார்.
‛ரயீஸ்‛ படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.