ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல, அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த், கமல் தொடங்கி பலர் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்கியுள்ளனர். நடிகைகளில் ராதா மகள்கள், மேனாவின் வாரிசு என அடுத்தடுத்து வாரிசு நடிகர்கள் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளனர். இப்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டையும் கலக்கிய மயிலு நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். நீண்ட காலமாகவே அவரை ஹீரோயினாக்க தமிழ், தெலுங்கு தொடங்கி ஹிந்தி வரை பலர் முயற்சித்தனர்.
இந்நிலையில் அந்த முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், மராத்தி படமான ‛சாய்ராத்' படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஹீரோயினாக நடிக்க வைக்க எண்ணி ஸ்ரீதேவி-போனிகபூரிடம் பேசியுள்ளார். அவர்களும் சம்மதம் சொல்ல இப்போது ஹீரோயினாக நடிக்க ரெடியாகிவிட்டார் ஜான்வி.
இதுப்பற்றி போனி கபூர் கூறியிருப்பதாவது... ‛‛ஜான்வியை தன் படத்தில் நடிக்க வைப்பது பற்றி கரண் ஜோகர் பேசியிருக்கிறார். மேற்கொண்டு இப்போது ஏதும் கூற முடியாது'' என்று கூறியுள்ளார்.
ஆக சின்னமயிலும் நடிக்க தயாராகிவிட்டார்.