ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான கிரிஷ் படங்களின் வரிசை அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. விரைவில் கிரிஷ் 4 உருவாக இருக்கிறது. தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் இதற்கான வேலையை தொடங்கிவிட்டார். ஹிருத்திக் ரோஷனே நான்காம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஹீரோயினாக தற்போது பாலிவுட், ஹாலிவுட் இரண்டிலும் அசத்தி வரும் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க ராகேஷ் மற்றும் ஹிருத்திக் இருவரும் விரும்புகின்றனர். மேலும் இதற்கு முன்னர் ஹிருத்திக்-பிரியங்கா நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் கிரிஷ்-4லும் இந்த ஜோடியை தொடர விரும்புகின்றனர் இருவரும். விரைவில் இப்படம் தொடர்பாக ஹிருத்திக், பிரியங்கா சோப்ராவிடம் பேசுவார் என தெரிகிறது.