ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டைரக்டர் ரெமோ டிசவுசா கடைசியாக இயக்கிய பிளையிங் ஜட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரெமோ, தான் பிளையிங் ஜட் படத்தின் அடுத்த பாதகத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், பிளையிங் ஜட் படத்திற்காக அதிகப்படியான கடின உழைப்பை அளித்துள்ளேன். அதனால் அப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்க விரும்புகிறேன். ஆனால், பலர் பிளையிங் ஜட் படத்தை ரசிக்கவில்லை என நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால் இந்த 2ம் பாகத்தை ஒவ்வொருவரும் விரும்பும் வகையிலும், பாராட்டு வகையில் இருக்க இன்னும் கூடுதல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற உள்ளோம் என்றார். ரெமோ டிசவுசா தற்போது, நடிகர் சூரஜ் பன்சோலி மற்றும் அஜய் தேவ்கனை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து எடுக்கும் தனது அடுத்த படத்திற்கான கதையை தயாரித்து வருகிறார்.