ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் படங்களில் எம்.எஸ் தோனி படமும் ஒன்று. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் எம்.எஸ் தோனி. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை சன்னி லியோன் நடித்து உள்ள ‛பேய்மான் லவ்' படமும் ‛எம்.எஸ் தோனி' படமும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருந்தது. ‛பேய்மான் லவ்' படத்திஙல் சன்னி லியோன் மற்றும் ரஜனீஷ் துக்கால் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். தற்போது ‛பேய்மான் லவ்' படம் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளனர். ‛எம்.எஸ் தோனி' படத்திற்காக ‛பேய்மான் லவ்' படம் வெளியிடும் தேதியை மாற்றியது படக்குழு. ஏனென்றால் ‛எம்.எஸ் தோனி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அது ‛பேய்மான் லவ்' படத்தின் வசூலை பாதிக்கும் என்று படக்குழுவினர் நினைக்கின்றனர். இதனால் ‛பேய்மான் லவ்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.