ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
‛மிர்ஷியா' எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருப்பவர் நடிகர் ஹர்சவர்த்தன் கபூர். ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது பேசிய ஹர்சவர்த்தன், தான் சினிமாவில் வர, நடிகர் அமீர்கானை முன்மாதிரியாக எடுத்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் மேலும் விரிவாக கூறியிருப்பதாவது.. ‛‛நான் எல்லாவிதமான படங்களையும் பார்ப்பேன். பாலிவுட்டில் நிறைய வியத்தகு நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு பிடிக்கும். அதிலும் அமீர்கானை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னைப்போன்றவர்கள் வளர்ந்து வரும் சூழலில் 2001-ம் ஆண்டு அமீர்கானின் தில் ஜாத்தா ஹே படம் வந்தது, தொடர்ந்து லகான், ரங் தே பசந்தி உள்ளிட்ட பல வித்தியாசமான படங்கள் அமீர்கானின் நடிப்பில் வெளிவந்தன. அந்தக்காலக்கட்டத்தில் பல நடிகர்களின் படங்கள் வந்தபோதும், அமீர்கானின் படம் மட்டும் கொஞ்சம் தனித்துவமாக தெரிந்தது. அப்போது முதல் நான் அவரை முன்மாதிரியாக எடுத்து கொண்டேன்'' என்றார்.
‛மிர்ஷியா' படம் அக்.,7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.