மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த ஹிட்டான படம் ‛கத்தி'. இப்படம் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. அதேப்போன்று ஹிந்தியிலும் ரீ-மேக்காக இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி ரீ-மேக்கான ஹாலிடேவில் நடித்த அக்ஷ்ய் குமாரே கத்தி ரீ-மேக்கிலும் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‛இக்கா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் அக்ஷ்ய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ரவுடி ரத்தோர் படத்திற்கு பிறகு மீண்டும் அக்ஷ்ய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மாயா அலி ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஜகன் ஷக்தி இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ஜனவரியில் துவங்க இருக்கிறது. அடுத்தாண்டு மத்தியில் இப்படம் வெளியாகும் என தெரிகிறது.