ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தோனி, அழகு ராஜா போன்ற படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே ரஜினியின் கபாலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட்டிலும் அசத்தி வருகிறார் ராதிகா ஆப்தே. தற்போது சில படங்களில் அசத்தி வரும் ராதிகா ஆப்தே அடுத்தப்படியாக நடிகர் அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்த்தன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் ஆதித்யா மோத்வானி இயக்கவுள்ள ‛பவேஷ் ஜோஷி' என்ற படத்தில் தான் ராதிகா ஆப்தே நடிக்க இருப்பதாகவும், இப்படம் தொடர்பாக ராதிகாவிடம் இயக்குநர் பேசியதாகவும், அவருக்கு கதை பிடித்துள்ளதாகவும், ஆனால் இன்னும் முடிவு மட்டும் சொல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் கதையில் தனக்கான ரோல் வலுவாக இருப்பதால் நிச்சயம் ராதிகா ஆப்தே ‛பவேஷ் ஜோஷி' படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.