ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் செய்து கொண்டதன் காரணமாக தற்போது அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்ப உள்ளார்.
இதுகுறித்து அனு மாலிக்கின் மகள் அன்மால் மாலிக் கூறியுள்ளதாவது... ''கடந்த செவ்வாய் அன்று என் அப்பா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கணயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வெள்ளியன்று ஆபரேஷன் நடந்தது. தற்போது அவருக்கு வலி அதிகமாக இருப்பதால் ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலம் தேறி வருகிறது, பயப்படும்படி ஒன்றும் இல்லை. வியாழன் அன்று வீடு திரும்புவார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.