ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில், 50 வயதை எட்டி இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பவர் சல்மான்கான். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது. இந்தச்சூழலில் சல்மான், வெளிநாட்டை சேர்ந்த லூலியா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் நீண்டநாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சல்மான் உடன் வீர் படத்தில் நடித்த ஜரின்கான், இவர்களது உறவுப்பற்றி கூறியிருப்பதாவது... ''இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது மகிழ்ச்சி தான். நான் மட்டுமல்ல என்னைப்போன்று இந்த நாடே, சல்மானின் திருமணம் எப்போது நடைபெறும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.