ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனது வெளிநாட்டு காதலியான லுலியா வன்சரை நடிகர் சல்மான் கான் திருமணம் செய்து போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இதில் சல்மானுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சமீபத்தில் லுலியா, சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து விமான நிலையத்தில் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதையும் தாண்டி, நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் திருமண வரவேற்பில் சல்மான் கானுடன் ஜோடி போட்டு வந்து, லுலியாவும் கலந்து கொண்டார். ஆனால் தற்போது, லுலியா ரோமானிய நாட்டைச் சேர்ந்த டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளருமான மரியஸ் மோகா என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மரியஸ், லுலியாவின் முன்னாள் கணவராம். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி, அந்த வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லையாம். இருவரும் 2009ம் ஆண்டு தங்களின் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார்களாம்.