ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜன்னத் 2, ராஸ்-3 உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை இஷா குப்தா. தற்போது ஹேரா பெரி 3, ரங்கூன், ருஸ்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர அஜய்தேவ்கனின் பாத்ஷாகோ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்ட்ராகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டார் இஷா. அதில் விலையுர்ந்த வைரம் மோதிரம் அணிந்தபடி அவர் போஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அவர், ''கேட்டார் நான் ஆம்'' என்று சொல்லிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இஷாவின் இந்த அறிவிப்பால் அவருக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தி இஷாவின் காதுகளுக்கு செல்ல உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயம் ஆகவில்லை என்று மறுப்பு செய்தியை குறிப்பிட்டுள்ளார்.