விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
'சீனிகம், பா, ஷமிதாப்' படங்களுக்குப் பிறகு பால்கி இயக்கி வரும் படம் 'கி கா'. இளையராஜா இசையமைக்கம் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், கரீனா கபூர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அர்ஜுன் கபூர் கழுத்தில், கரீனா தாலி கட்டுவது போன்ற மோஷன் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. சினிமாவாக இருந்தாலும் இதுபோன்ற காட்சிகள் படங்களில் அதிகம் இடம் பெற்றதில்லை. அதனால் கலாச்சாரக் காவலர்கள் இந்தப் படத்திற்கு எதிராக புதிதாக சர்ச்சையைக் கிளப்பவும் வாய்ப்புள்ளது.
அர்ஜுன் கபூர் வீட்டிலேயே இருக்கும் கணவராகவும், கரீனா கபூர் வேலைக்குச் செல்லும் மனைவியாகவும் இருப்பதும் தான் இந்தப் படத்தின் கதை. அதனால்தான் இப்படி ஒரு மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், இது போன்ற செயல்களின் மூலம் படத்துக்கு ஒரு விளம்பரத்தைத் தேடிக் கொள்வதும் பாலிவுட்டில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். திருமணத்தின் போது மனைவி கழுத்தில் கணவன் தாலி கட்டுவதுதான் நமது பாரம்பரிய வழக்கம். அந்த வழக்கத்தைக் கொச்சைப்படுத்துவ போலவும் இந்த போஸ்டர் இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது. எப்படியும் இந்நேரம் அதை யாராவது ஆரம்பித்திருப்பார்கள். எப்படியோ படத்திற்கு பரபரப்பான விளம்பரம் கிடைத்தால் சரி.