ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை ஏற்றி கொன்றதாக சல்மான் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதனால் சல்மான் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறார்கள். இதுப்பற்றி சல்மானின் தந்தை சலீம்கான் கூறியுள்ளதாவது... நீதிமன்றம் மீது எங்களுக்கு எப்போது மதிப்பு உண்டு, சல்மான்கான் விடுதலை தொடர்பான தீர்ப்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியவரிடத்தில் சல்மானின் திருமணம் பற்றி கேட்டபோது... திருமணம் என்பது அவரது விதிப்படி நடப்பது. அதையாரும் மாற்றமுடியாது, சல்மானுக்கு திருமணம் ஆக வேண்டும் என்ற விதியிருந்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்று கூறியுள்ளார்.