ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் 'பிக் பி' என புகழப்படும் நடிகர் அமிதாப் பச்சன், தான் 25 சதவீத கல்லீரல் செயல்பாட்டில் தான் உயிர் வாழ்வதாகவும், 75 சதவீதம் செயல் இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஹெபாபிடிஸ் பி நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது... எனக்கும் ஹெபாபிடிஸ் பி நோய் தாக்கியது. ஆனால் இது ஒரு விபத்து. கூலி படத்தில் ஏற்பட்ட விபத்தில் நான் மிகவும் படுகாயமடைந்தேன். அப்போது எனக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெபாபிட்டிஸ் பி நோய் தாக்கம் இருந்த ரத்தமும் செலுத்தப்பட்டது. இதனால் எனக்கும் அந்த நோய் தாக்கியது. இதனால் எனது 75 சதவீதம் கல்லீரல் செயல் இழந்துவிட்டது. தற்போது 25 சதவீதம் கல்லீரல் செயல்பாட்டில் தான் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 12 சதவீதம் பாதிப்பில் இருக்குபோதே நான் கவனித்திருந்தால் குணமாகியிருக்கும் என்று கூறியுள்ளார்.