ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பஞ்சாப்பில் தன்கல் படத்தின் சூட்டிங்கை நீட்டித்துள்ளாராம், அமிர்கான். இதற்கு முன் தர்மேந்திராவின் சொந்த கிராமமான தன்கோ பகுதியில் இப்படத்தை அமிர்கான் எடுத்து வருவதாக ஏற்கனவே கூறி இருந்தோம். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் கூறி இருந்த அமிர்கான், இதற்கான சிறப்பு ஸ்க்ரீனிங்கிற்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் தற்போது, பஞ்சாப்பில் உள்ள அமிர்கான் படித்த பள்ளியிலும் சில காட்சிகளை படமாக்க அமிர்கானும் தன்கால் படக் குழுவும் முடிவு செய்துள்ளதாக பஞ்சாப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1857ல் கட்டப்பட்ட குஜராத்தின் குஜ்ஜர்வால் அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் இந்த சூட்டிங் நடக்கிறதாம். சீக்கிய சுதந்திர போராட்ட வீரர் கர்தார் சிங் சரபாவும் இந்த பள்ளியில் படித்தவம் தானாம். இந்த பள்ளியில் சூட்டிங் நடத்த ஆசைப்பட்ட அமிர்கான், பள்ளி தலைமை ஆசிரியரிடமும், தனது குடும்பத்தினர்களிடமும் பேசி உள்ளார். இந்த படத்தில் அமிர்கான் மல்யுத்த வீரராக நடிக்கிறாராம். பிகே படத்திற்கு பிறகு அமிர்கானுக்கு இந்த படம் ரெக்கார்ட் பிரேக் படமாக அமையும் என கூறப்படுகிறது.