ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சில வருடங்களுக்கு முன் பாலிவுட் கவர்ச்சிக்கன்னி மல்லிகா ஷெராவத்திற்கு ஜாக்கிசானுடன் 'தி மித்' படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக ஜாக்கிசானுடன் இணைந்து நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு இந்தமுறை பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு அடித்திருக்கிறது. தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துவந்த சோனு சூட், பாலிவுட்டிலும் அதே வேலையைத்தான் செய்துவந்தார். இப்போது ஜாக்கிசானுடன் நடிக்க வந்த வாய்ப்பால் அவரது இமேஜ் டக்கென மாறியிருக்கிறது.
ஜாக்கிசான் தற்போது நடித்துவரும் படம் 'குங்பூ யோகா'. இந்தப்படத்தில் ஜாக்கிசானுடன் படம் முழுவதும் வரும் கேரக்டரில் தான் சோனு சூட் நடிக்கிறாராம். ஸ்டான்லி டான் என்பவர் இயக்கும் இந்தப்படம் சீன - இந்திய கூட்டு தயாரிப்பில் உருவாகும் முதல் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. 2014 ஆம் வருடமே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு துபாயில் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கிறது. அடுத்து இந்தியாவுக்கும் வர இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கால்வாசி படபிடிப்பு சீனாவில் தான் நடைபெற இருக்கிறதாம்.