'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
முன்னணி நடிகர்களின் மனைவி கேரக்டர்களில் நடிக்க தனக்கு எவ்வித தயக்கமுமில்லை என்று பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, சன்னி லியோன் கூறியதாவது, முன்னணி நடிகர்கள், தங்கள் படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கிய காலம் தற்போது மெல்ல மெல்ல மாறி வருவதாகவும், தற்போது அவர்களிடமிருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில், எனது திருமண நிகழ்ச்சியில், ரன்பீர் கபூரும், அனுஷ்கா சர்மாவும் உற்சாக நடனமாடும் பாடல் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. பல நடிகர்களும், தற்போது அவர்களது படங்களில் நடிக்க என்னை அணுகி வருகின்றனர். நான் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க இருக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சன்னி லியோன் கூறினார்.