ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அண்ணன் ராஜா இயக்க தம்பி ரவி நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான 'தனி ஒருவன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 20 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. ராஜா, ரவி இருவரும் இணைந்து இதுவரை ஆறு படங்களைக் கொடுத்துள்ளனர். அந்த ஆறு படங்களில் 'தனி ஒருவன்' படத்தைத் தவிர அனைத்துமே ரீமேக் படங்கள்தான். ராஜா முதன் முதலில் இயக்கிய தெலுங்குப் படமான 'அனுமான் ஜங்ஷன்' படம் கூட மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படம்தான். விஜய் நாயகனாக நடிக்க ராஜா இயக்கிய 'வேலாயுதம்' படமும் ரீமேக் படம்தான். ஆக, இதுவரை ராஜா இயக்கிய எட்டு படங்களில் ஏழு படங்கள் ரீமேக் படங்கள்தான்.