Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம்

08 ஜூலை, 2015 - 16:22 IST
எழுத்தின் அளவு:
Shahid-Kapoor-marriage-held-in-mumbai

பல முன்னணி நடிகையருடன் கிசு கிசுக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு, ஒருவழியாக திருமணம் முடிந்தது. இதில், 40 பேர் மட்டுமே பங்கேற்றனர்.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ஷாகித் கபூர், 34. ஜப் வீ மீட், ஹைதர், தில் மாங்கே மோர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர். பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூரை, உயிருக்கு உயிராக காதலித்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இதன்பின், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா, பிபாஷா பாசு, அனுஷ்கா சர்மா ஆகிய நடிகையருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.


ஷாகித் கபூரின் திருமண செய்தியை எதிர்பார்த்து, ஒட்டுமொத்த பாலிவுட்டும் காத்திருந்த நிலையில், பெற்றோரால் பார்த்து, நிச்சயிக்கப்பட்ட, டில்லியைச் சேர்ந்த, மீரா, 21, என்ற பெண்ணை, ஷாகித் கபூர், நேற்று திருமணம் செய்தார். மணப்பெண் மீராவின் பெற்றோர், ராதா சோமி என்ற அமைப்பை பின்பற்றுகின்றனர். ஷாகித் கபூர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். ராதா சோமி என்பது, அளவற்று தூய அன்பின் அடிப்படையில் செயல்படும் அனைத்து மதத்துக்கும் பொதுவான அமைப்பு என, அதை பின்பற்றுவோர் கூறுகின்றனர்.


அந்த அமைப்பின் மரபுப்படி திருமணம் சடங்குகள் நடந்தன. திருமணம் முடிந்ததும், டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து வைபவங்கள் நடந்தன. ஷாகித் கபூர், வெள்ளை நிறத்தில், எம்பிராய்ட் செய்யப்பட்டிருந்த குர்தா பைஜாமா அணிந்திருந்தார்.


மீரா, இளம் சிவப்பு நிறத்தில், எம்பிராய்ட் செய்யப்பட்ட, பஞ்சாபி ஸ்டைல், லெஹெங்கா என அழைக்கப்படும் புடவையை அணிந்திருந்தார். இவர்களின் திருமண வரவேற்பு, இம்மாதம், 12ல், மும்பையில் நடக்கவுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in