ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
62வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் இந்திபட பிரிவில் குயின் படம் 10 விருதுகளை குவித்தது. சிறந்த படமாக குயின் தேர்வு பெற்றது. சிறந்த நடிகை - கங்கனா ரணாவத், சிறந்த இயக்குனர் - விகாஷ் பால், சிறந்த எட்டிட்டர் - அபிஹித் கோக்டே, சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் - அமித் திரிவேணி, சிறந்த ஒளிப்பதிவாளர்கள் - சித்தார்த் விபின், பாபிசிம்ஹா, உள்பட 10 விருதுகளை குயின் வென்றது.
இதுதவிர சாஹித் கபூர் (ஹெய்டர்) சிறந்த நடிகராகவும், பகத் அப்சல் கான் (குகூபாரத்), சிறந்த அறிமுக நடிகராகவும, கீர்த்தி சனூன் (ஹெரோபதி) சிறந்த அறிமுக நடிகையாகவும் தேர்வு பெற்றனர் ஹெய்டர் படத்தில் நடித்த தபு சிறந்த துணை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காமினி குஷாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சங்கர் எல்ஷான் லாய் சிறந்த இசை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.