விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட் திரையுலகில் சமீபகாலமாக, நடிகைகள் தயாரிப்பாளராக மாறி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது சன்னி லியோனும் இணைந்துள்ளார். சன்னி லியோன், தனது கணவர் டேனியல் வெபருடன் இணைந்து கடந்த 2009ம் ஆண்டில் சன்லஸ்ட் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியிருந்தார். தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பின்னரும், சன்னி லியோன், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில், தங்களது சன்லஸ்ட் பி்க்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு முன்னணி நடிகர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.