மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கவர்ச்சி நடிப்பின் மூலம், பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்த சன்னி லியோன், தற்போது ரியாலிட்டி ஷோக்களுக்கு, வழிகாட்டியாக இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற விருப்பப்படும் பாடகர்கள், நடனமாடவிருப்பமுள்ளவர்கள் மற்றும் நடிக்க விருப்பமுள்ளவர்கள், எவ்வாறு, தங்களது பங்களிப்பை ஷூட் செய்ய வேண்டும். என்ன என்ன அம்சங்களை, ரியாலிட்டி ஷோ நடுவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பது போன்ற அறிவுரைகளை பங்கேற்க விரும்புபவர்களிடம் கூறி, அவர்களை, ரியாலிட்டி ஷோக்களில் வெற்றிவாகை சூடுவதற்கான வழிமுறைகளை, சன்னி லியோன் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில், இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட இந்திய திரைநட்சத்திரம் என்ற பெருமையை, சன்னி லியோன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.