ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல்ஹாசனின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசனை போலவே, அவரது இரண்டாவது வாரிசான அக்ஷ்ராஹாசனும் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். பால்கி இயக்கும், ஷமிதாப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய ரோலில் அமிதாப் பச்சனும் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அக்ஷ்ரா கமிட்டாவதற்கு முன்னர் அவரை 12 முறை டெஸ்ட் ஷூட் எடுத்தாராம் பால்கி. அதேசமயம் அக்ஷ்ரா ரியலாக என்ன தோற்றத்தில் இருந்தாரோ அப்படியே படத்திலும் படமாக்கியுள்ளார். இருப்பினும் அவரது தலைமுடி உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களை மட்டும் மாற்றி படமாக்கியுள்ளாராம். அக்ஷ்ராவின் ரியல் நடிப்பும் அருமையாக வந்துள்ளதாம்.