ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள சஞ்சய் தத்திற்காக, பிகே படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. பிகே படத்தில் சஞ்சய் தத் நடித்திருந்த போதிலும், அவர் சிறையில் இருந்ததால், படத்தின் புரோமோஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. தற்போது பரோலில், சஞ்சய் தத் வெளியே வந்துள்ளார். இதனிடையே சான்டா குரூஸில் உள்ள பிரிவியூ தியேட்டரில், சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. சஞ்சய் தத், அவரின் மனைவி மான்யதா, மற்றும் குழந்தைகளுடன் படம் பார்த்தார். இவர்களுடன், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, நடிகர் அமீர் கான் உள்ளிட்ட படக்குழுவினரும் இருந்தனர்.