ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சல்மான் கான் சகோதரி அர்பிதா திருமண நிகழ்ச்சிகளிலும், மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், சல்மான் கானை, ஷாரூக் கான் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த தருணம் குறித்து ஷாரூக் கான் கூறியதாவது, நாங்கள் (சல்மான் மற்றும் ஷாரூக்) ஒன்றும் பரம்பரை எதிரிகள் அல்ல. எங்களுக்குள் சில முறை கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்திருப்பினும், பல முறை மகிழ்ச்சியாகவே இருந்துள்ளோம். பரஸ்பரம், தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம். எங்களது நட்பு, 25 ஆண்டுகால நட்பு, அர்பிதா, தான் பார்த்து வளர்ந்த பெண். அர்பிதா எனக்கு சகோதரி தான். நான் இல்லாமல், எனது சகோதரியின் திருமணம் மற்றும் மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்று ஷாரூக் கூறினார்.