சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பேரைக்கேட்டாலே சும்மா அதிருமில்ல என்கிற மாதிரி சன்னி லியோனின் பேரைக்கேட்டாலே அதிர்ந்து போவார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு தான் நடிக்கிற ஒவ்வொரு படங்களிலுமே ஆபாச தீயை பற்ற வைத்துக்கொண்டு வருகிறார் சன்னி. சில படங்களில் ஆபாச நடிப்பு என்றால், சில படங்களில் நிர்வாண கோலத்திலும ஆக்டு கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில், பட்டயா மஸ்திசாதே என்ற இந்தி படத்தில் டபுள் ரோலில் நடித்து வருகிறார் சன்னி. ஒரு வேடத்தில் அவர் நடித்தாலே படுபயங்கரமாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வரும் அவர், ஒரு வேடத்தில் அடக்கி வாசித்தபோதும், இன்னொரு வேடத்தில் வழக்கம்போல் ஆபாச புயலாய் உருவெடுத்திருக்கிறாராம்.
அதிலும், ஒரு காட்சியில் அவர் பிகினி உடையணிந்து குழாயில் தண்ணீரை பீய்த்தபடி காரை கழுவும் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி இளைஞர் வட்டாரத்தை கொழுந்துவிட்டு எரிய வைத்திருக்கிறது. ஆனால் இது ஒரு சின்ன ட்ரெய்லர்தானாம் இன்னும் படம் முழுக்க எவ்வளவோ இருக்கிறதாம். படம் திரைக்கு வரும் வரை அவ்வப்போது இதுபோன்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.