ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஷாரூக்கான் நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படம் அக்., 24ம் தேதி(நாளை) வெளியாக இருக்கிறது. இந்தப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கூறுகிறார் ஷாரூக்கான். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஹேப்பி நியூ இயர் படத்தை எல்லோரும் பார்ப்பார்களா என தெரியவில்லை, ஆனால் பார்த்தவர்களின் முகத்தில் நிச்சயம் சந்தோஷம் இருக்கும். நான் கடவுளை வேண்டுகிறேன், இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஹேப்பி நியூ இயர் படத்தில் ஷாரூக்கான் உடன் அபிஷேக், தீபிகா, சோனு சூட், போமன் இரானி மற்றும் விவன் ஷா நடித்துள்ளனர். பராகான் இயக்கியுள்ளார், ஷாரூக்கானே தனது ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து இருக்கிறார்.