ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ். இவர் ஒரு பேட்மிட்டன் விளையாட்டு வீரர். மகளையும் பேட்மிட்டன் வீராங்கனையாகத்தான் வளர்த்தார், ஆனால் அவர் நடிகையாகிவிட்டார். தீபிகா ஒரு தனியார் வங்கியின் விளம்பர தூதராக இருக்கிறார். அந்த வங்கியின் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பென்சன் தொடர்பான அந்த வங்கியின் விளம்பரத்தில் தீபிகாவின் தந்தையாக அவரது ஒரிஜினல் தந்தை பிரகாசை நடிக்க வைக்க அந்த வங்கி விரும்பியது. இதனை தீபிகாவிடம் சொன்னது.
தீபிகா, தந்தையிடம் சொன்னதும் அவர் தயங்கினார். கேமராவை கண்டாலே வெட்கம் வந்து விடும் என்று கூறி மறுத்துள்ளார். ஆனாலும் தீபிகா விடாமல் அப்பாவை துரத்தி வீட்டில் வைத்து அவரே வீடியோ ஷூட் பண்ணி அப்பாவின் கேமரா கூச்சத்தை போக்கி கடைசியில் சம்மதிக்க வைத்து விட்டார். சமீபத்தில் இதன் ஷூட்டிங் நடந்தது. இனி தீபிகாவின் அப்பா, இந்திப் படங்களில் அப்பா, மாமா வேடங்களில் நடிக்கலாம் என்கிறார்கள்.