மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த ஹம் தில் தே சுக் சனம் படத்தில் இடம்பெற்ற தோலி தரா பாடல் தற்போது மீண்டும் ரீமேக் செய்து ஒலிக்கச் செய்யப்பட உள்ளதாம். பாபி கான் இயக்கும் லீலா படத்தில் தான் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதாம்.
இந்த முறை இந்த பாடலில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக நடனமாட இருப்பவர் சன்னி லியோன் தான். இவர் லீலா படத்தில் இளவரசி கேரக்டரில் நடிக்க உள்ளார். ரீமேக் செய்யப்படும் இந்த பாடலை துள்சி குமார் பாடி உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ராஜஸ்தான் பாலைவளத்தின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த படத்தை எழுதி, இயக்குகிறார் பாபி கான். இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் இவர் தானாம். படத்தில் 9 பாடல்களுக்கும் குறையாமல் உள்ளதாம்.
லீலா படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமாரிடம் கேட்ட போது, எனக்கு பிடித்த சில பழைய பாடல்களை ரீ மேக் செய்ய திட்டமிட்டேன். அதன் முயற்சியாக தான் சில பாடல்களை தேர்வு செய்து ரீ மேக் செய்ய உள்ளோம். ஆஜ் பிர் தும் பி பியார் ஆய் ஹாய் உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்கள் அவற்றில் சில. தோலி தரா பாடலை ரீமேக் செய்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
இருப்பினும், இந்த பாடலின் சில பகுதிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதாகவும், ஜூலை மாதம் ஜோத்பூரில் இந்த பாடலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் பாலிவுட்டின் நம்ப தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.