மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைப் நடித்து வெளிவந்திருக்கும் பேங் பேங் படம் ரிலீசான முதல் நாளே ரூ.27.54 கோடி வசூலை பார்த்துள்ளது. இது ஹிருத்திக்கின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு ஹிருத்திக் நடித்து வெளிவந்த கிரிஷ்-3 படத்தின் முதல் நாள் வசூலான ரூ.25.5 கோடி தான் மிகப் பெரிய தொகையாக கருதப்பட்டது. தற்போது பேங் பேங் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
பேங் பேங் படத்தின் போட்டி என கூறப்படும், ஷாகிப் கபூர் நடித்து வெளிவந்துள்ள ஹைடர் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.6.14 கோடியாகும். இவ்விரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டாலும், இவற்றின் வசூலில் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பேங் பேங் படம் ரூ.180 கோடி செலவில் எடுக்கப்பட்டதாகும். அதே சமயம் ஹைடர் படம் ரூ.24 கோடி முதலீட்டிலேயே எடுக்கப்பட்டது. இருப்பினும் பேங் பேங் படத்தை விட ஹைடர் படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள் வந்துள்ளதால் இனி வரும் நாட்களில் ஹைடர் படத்தின் வசூல் வேட்டை சூடுபிடிக்கும் என்று அப்படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.