ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் சினிமாவில் அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான் போன்ற கான் நடிகர்களின் படங்கள்தான் ஓப்பனிங்கிலேயே வசூலை வாரிக்குவிக்கும். ஆனால், இப்போது அவர்கள் நடித்த படங்களையெல்லாம் மிஞ்சும் வகையில், பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரிகோம் படம் வெளியான பத்து நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிசில் சாம்பியனாகியிருக்கிறது.
இதனால், படங்கள் வெற்றி பெற மெகா ஹீரோக்கள் தேவையில்லை. நல்ல கதையும், அதை தில்லாக சுமக்கக்கூடிய நடிகையும இருந்தாலே போதும், வசூல் கியாரண்டி என்ற முடிவுக்கு பாலிவுட் பட அதிபர்கள் வந்து விட்டனர். அதனால், வித்யாபாலனைத் தொடர்ந்து, இப்போது பிரியங்கா சோப்ராவும் பாலிவுட் படாதிபதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார்.
அதோடு, இத்தனை நாளும், ஹீரோக்களுக்காக கதை பண்ணிய பாலிவுட்டின் கமர்சியல் டைரக்டர்கள், இப்போது ஹீரோயின்களுக்காகவும் கதை பண்ணத் தொடங்கி விட்டார்களாம். அதேபோல், கதாநாயகிகளை நம்பி 50 கோடி, 60 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன்வரத் தொடங்கி விட்டார்களாம். இப்படி பாலிவுட்டில் கதாநாயகிகளுக்கு திடீரென்று ஏற்பட்டிருக்கும் வரவேற்பினால் உச்சத்தில் இருக்கும் கான் நடிகர்கள் ஷாக்காகி உள்ளார்களாம்.