ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அர்ஜூன் கபூர், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் பைண்டிங் பேணி. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. இதனையொட்டி தீபிகா, அர்ஜூன் உள்ளிட்டோர் படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏஹ் ஹே மொகபதின் சீரியல் உடன் தங்களது பைண்டிங் பேணி படத்தையும் புரொமோட் செய்தனர். அதன்படி சீரியல் நடக்கும் இடத்திற்கு சென்று தீபிகா, அர்ஜூனை, சீரியலில் நடிக்கும் திருமதி பாலா வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு பஞ்சாபி முறைப்படி விருந்து கொடுத்தார். பஞ்சாப் உணவு வகைகளை அர்ஜூன், தீபிகா இருவரும் ரசித்து, ருசித்து உண்டனர்.
பின்னர் தீபிகா படுகோனே கூறுகையில், மொகபதின் சீரியலில் திவ்யங்காவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நான் நடித்த ரோலை காட்டிலும் அவரது ரோலம் அற்புதமாக இருக்கிறது என்றார். தீபிகாவின் இந்த பாராட்டு திவ்யங்காவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
அர்ஜூன் கபூர் கூறுகையில், ஏஹ் ஹே மொகபதின் சீரியல் போன்று இல்லை, ஒரு சினிமா படம் போன்று இருக்கிறது என்று கூறியுள்ளார்.