ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் அழகு மற்றும் செக்ஸியான நடிகை கத்ரீனா கைப். இவரும் பாலிவுட்டின் இளம் நடிகரான ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் ரன்பீர்-கத்ரீனா பற்றி ரன்பீரின் உறவு பெண்ணும், நடிகையுமான கரீனா கபூர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களது உறவுப்பற்றி ரன்பீரின் சகோதரியான ரித்திமா கபூரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, கத்ரீனா மிகவும் அழகான பெண், கத்ரீனாவை சந்தித்து இருக்கிறேன், ஆனால் அதற்கு மேல் அவர்களை பற்றி தெரியாது என்றார்.
ரன்பீரும், கத்ரீனாவும் 2015ம் ஆண்டில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகிறதே என்று கேட்டபோது, அதைப்பற்றி தெரியவில்லை என்றார். மேலும் தனது சகோதரர் ரன்பீர் பற்றி ரித்திமா பேசுகையில், ரன்பீரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வோம், எல்லோரிடம் அவன் மிகவும் அன்பு செலுத்தும் குணம் உடையவன், சிறு விஷயத்திற்காக சிறுபிள்ளைத்தனமாக நாங்கள் சண்டை போட்டுள்ளோம், ஆனால் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு அன்பு வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.