இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
தமிழ் படங்களில் நடித்து வந்த, திடீரென இந்தி சினிமாவிலும் கால்பதித்தார். அப்படி அவர் கால்பதித்து வெளியான முதல்படம் ராஞ்சனா. தனுஷின், முதல்படமே இந்தியில் சூப்பர் ஹிட்டானது, அதோடு ரூ.100 கோடி வசூலிலும் இணைந்தது. இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருந்தார். இந்தப்படம் துவங்கிய போதே தனுஷூம், சோனம் கபூரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். தான் முதல்படத்தில் இந்தியில் பேச சிரமப்பட்டபோதெல்லாம், சோனம் கபூர் தான் தனக்கு இந்தியை புரிய வைத்து எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் என தனுஷ், சோனம் கபூரை பற்றி முந்தைய தனது பேட்டியில் கூறியிருந்தார். சரி இப்போது எதுக்கு இந்த பழைய கதை என்கிறீர்களா...? விஷயம் இருக்கு, இந்தியில் தன் முதல் பட ஹீரோயினான சோனம் கபூருடன் நேருக்கு நேர் மோத இருக்கிறார் தனுஷ்.
தனுஷ், தற்போது பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன் உடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். கூடவே இப்படத்தில் கமல்ஹாசனின் இளையமகளான அக்ஷ்ராஹாசன், ஒரு நடிகையாக தன் சினிமா கேரியரை துவங்கியுள்ளார். இதனால் இப்படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப்படம் அடுத்தாண்டு, அதாவது 2015 பிப்ரவரி 6ம் தேதி வெளியாக இருக்கிறது. அன்றைய தினம் தான் அபிேஷக் டோக்ரா இயக்கத்தில், சோனம் கபூர், தற்போது நடித்து வரும் புதிய படமான டோலி கி டோலி படமும் ரிலீஸாக இருக்கிறது. ராஞ்சனாவில் ஜோடி போட்ட இருவரும், தற்போது ஷமிதாப்-டோலி கி டோலி படத்திற்காக மோத இருக்கின்றனர்.