விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
இந்தி நட்சத்திர தம்பதிகளான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஈஷா சினிமா நடிகை. அவருக்கு 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளைய மகள் அகானா. இவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் முறைப்படி நடனம் கற்று ஆடி வருகிறார். அகானாவுக்கும் டில்லி தொழில் அதிபர் வைபவ்வோராவுக்கும் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) மும்பையில் திருமணம் நடந்தது. வைபவ் பஞ்சாபி என்பதால் முதலில் பஞ்சாபி முறைப்படியும், ஹேமமாலினி தமிழ்நாட்டுக்காரர் என்பதில் தமிழ் வைதீக முறைப்படியும் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வருகிற 5ந் தேதி மும்பை நட்சத்திர ஓட்டலில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் இந்தி திரையுலக முன்னணியினர் கலந்து கொள்கிறார்கள்.