ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர், ரிக் ரிகார்டேன், "பெர்சி ஜாக்சன்: சீ ஆப் மான்ஸ்டெர் என்ற பெயரில் எழுதிய நாவல், அங்கு பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அந்த நாவலைத் தழுவி, இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிரேக்க நாட்டில், போசிடன் என்ற கடவுள், மிகவும் பிரபலம். இவரை, கடல் கடவுள் என, அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். இவர்களுக்கு ஏராளமான பிள்ளைகள் உண்டு. அவர்களில் ஒரு பிள்ளை தான், பெர்சி ஜாக்சன். அவர் தான், இந்த படத்தின் ஹீரோ. தன் நண்பர்களுடன், கடல் பயணம் மேற்கொள்ளும் ஜாக்சன், பல ஆபத்துக்களை சந்திக்க நேர்கிறது. அதிலிருந்து, தன் நண்பர்களுடன் எப்படி மீள்கிறார் என்பதை, அதிரடி சாகசமும், சஸ்பென்சும் கலந்து, அதிர வைக்கும் வகையில், படமாக்கியுள்ளனர். ஜாக்சனாக, பிரபல ஹாலிவுட் நடிகர், லோகென் லெர்மான் நடித்துள்ளார்.