நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

வெங்கட் ஜனா இயக்கத்தில் ரஞ்சித், மெகாலி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இறுதிமுயற்சி'. அக்டோபர் 10ல் ரிலீசாகிறது. தொழிலதிபரான ரஞ்சித், வியாபார நெருக்கடி காரணமாக ஒருவரிடம் 80 லட்சம் கடன் வாங்குகிறார். அவரோ கந்து வட்டி பார்ட்டி. கடன், வட்டியை திருப்பி தராதவர்களை டார்ச்சர் செய்கிறார். அந்த வில்லன் பிடியில் ரஞ்சித்தும், அவர் குடும்பமும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது கதை. அப்போது இக்கட்டான சூழலில் ஒரு முகம் தெரியாத கேரக்டர் ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுகிறது. ரஞ்சித், அவர் மனைவி, 2 குழந்தைகளை காப்பாற்றுகிறது. அந்த கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் விஜய்சேதுபதி.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், ‛‛எனக்கும் விஜய்சேதுபதிக்கும் அதிகம் நட்பு இல்லை. ஆனாலும், கதை சொல்லி, வாய்ஸ் ஓவர் தரமுடியுமா என்று கேட்டோம். அவரோ மும்பையில் பிஸியாக இருந்தார். ஆனாலும், ஒரு நாள் அவரே சொந்த செலவில் பிளைட்டில் சென்னை வந்து, ஒரு சின்ன டப்பிங் தியேட்டரில் அந்த கேரக்டருக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தார். ஒரு பைசா பணம் வாங்கவில்லை. அவரின் செயல் நெகிழ்ச்சியை தந்தது. கடனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவும், அவர்களுக்கு ஆறுதலாக பேசும் விஜய்சேதுபதியின் வாய்ஸ் படத்துக்கும் பெரிதும் உதவியது. படம் பார்ப்பவர்கள் அந்த வாய்ஸை பாராட்டுவார்கள்'' என்றார்.