பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் |
'சிங்கம் அகைன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அர்ஜூன் கபூர் நடித்துள்ள படம் 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி'. முடாசர் அசீஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பூமி பட்னேகர், ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாக நடித்துள்ளனர். காமெடியுடன் கூடிய காதல் படமாக உருவாகியுள்ளது. நாளை (பிப்.,21) ரிலீசாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன் கபூர் பேசியதாவது: எந்தவொரு படத்திற்கும் புரமோஷன் முக்கியமாக பார்க்கப்படுகிறது. புரமோட் செய்தால் தான் ரசிகர்களுக்கு படத்தை கொண்டு செல்ல முடியும், அவர்களை பார்க்க வைக்க முடியும். அவற்றில் பல வகைகள் இருக்கலாம். ஆனால், புரமோஷன் செய்தால் மட்டுமே படம் வெற்றியடைந்துவிடும் என உறுதியளிக்க முடியாது. படத்தை பார்த்து, வெற்றியடைய செய்யலாமா என்பதை ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள்.
'2 ஸ்டேட்ஸ், கி அண்ட் கா, முபாரகா' ஆகிய படங்களில் உள்ள நகைச்சுவைகளை மக்கள் வரவேற்றுள்ளனர். அதேபோல் இந்த படத்தையும் மக்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன். பாலிவுட்டில் நடிகர் கோவிந்தாவின் காமெடி ரொம்ப பிடிக்கும். அதேபோல், அக்ஷய் குமாரின் டைமிங் காமெடி அற்புதமாக இருக்கும். எனது மாமா அனில் கபூரின் 'நோ என்ட்ரி, வெல்கம்' படங்களின் காமெடியும் நன்றாக இருக்கும்.
சமீப நாட்களாக பாலிவுட் படங்கள் சரியாக ஓடுவதில்லை என்கிறீர்கள். பாலிவுட் மட்டுமல்ல, எந்த மொழியானாலும் இப்போதெல்லாம் முன்புபோல் பாக்ஸ்ஆபிஸ் ஹிட்டாகுவதில்லை. இன்றைய தலைமுறையினர் புத்திசாலியாகிவிட்டனர். தியேட்டர் சென்று படம் பார்ப்பதற்கு முன்பாகவே, சமூக வலைதளங்களில் படத்தின் வரவேற்பை பற்றி தெரிந்துகொள்கின்றனர். குறிப்பாக கோவிட் தொற்று பரவலுக்கு பிறகு இப்படிதான் நடக்கிறது. இப்போதெல்லாம் எந்த படமும் வெற்றியும் அடையலாம், தோல்வியும் அடையலாம். விக்ராந்த் மாஸ்ஸியின் '12த் பெயில்' படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.