ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பாலிவுட்டில் கடந்த வாரம் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த சாவா என்கிற திரைப்படம் வெளியானது. சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜி மன்னனின் வாழ்க்கை வரலாறை தழுவி வரலாற்று படமாக இது உருவாகி இருந்தது. சாம்பாஜி மன்னனாக விக்கி கவுசலும் அவரது மனைவி ஏசுபாயாக ராஷ்மிகாவும் நடித்திருந்தனர். லக்ஷ்மன் உடேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது சத்ரபதி சிவாஜியின் 395வது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜியின் வரலாற்றை பற்றி, அவர் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் பற்றி உருவாகி இருக்கும் சாவா திரைப்படத்திற்கு வரி விளக்கு அளிப்பதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார் இதனால் படக்குழுவினர் உற்சாகமரிந்துள்ளனர்.
அதே சமயம் இந்த படம் வெளியாவதற்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் பாடல் டீசர் ஒன்றில் சாம்பாஜி மன்னன் ஆடிப் பாடுவதாக ஒரு காட்சி இடம் பெற்றது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அந்த காட்சியை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டிய இருக்கும் என்று மகாராஷ்டிரா அரசு கடுமை காட்டிய நிலையில் தற்போது இன்னொரு மாநிலமான மத்திய பிரதேச அரசு இந்த படத்திற்கு வரி விளக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




