விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்தவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44வது படத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, அடுத்தபடியாக விஜய்யின் 69 வது படத்திலும் நடித்து வருகிறார். விஜய் 69வது படத்தை முடித்ததும் ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் பூஜா ஹெக்டே. இது குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை டேவிட் தவான் இயக்குகிறார். இது குறித்த தகவலை பூஜா வெளியிட்டுள்ளார்.