பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

புகழ்பெற்ற ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' வரிசையில் அடுத்து வருகிறது 'முபாஸா: தி லயன் கிங்'. முந்தைய பாகத்தில் குட்டி சிங்கத்தின் தந்தையாக இருந்த முபாஸாவை மெயின் கதாபாத்திரமாக்கி இந்த படம் உருவாகி உள்ளது. முந்தைய பாகத்தில் இடம்பெற்றிருந்த அத்தனை கேரக்டர்களும் இதில் இருக்கிறது. அந்த கேரக்டர்களுக்கு முன்பு யார்- குரல் கொடுத்தார்களோ அவர்கள் இந்த பாகத்திற்கும் குரல் கொடுக்கிறார்கள்.
முபாஸா கேரக்டருக்கு இந்த பாகத்தில் ஹாலிவுட் நடிகர் ஆரோன் பெரி குரல் கொடுத்துள்ளார். அதேபோன்று ஹிந்தி பதிப்பிற்கு ஷாருக்கான் குரல் கொடுத்துள்ளார். தமிழில் சூர்யா அல்லது விஜய்சேதுபதி குரல் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுதவிர தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் அந்தந்த மொழிகளின் முன்னணி நடிகர்கள் குரல் கொடுக்க இருக்கிறார்கள். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பெர்தி ஜென்கின்ஸ் இயக்கி உள்ளார். வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளிவருகிறது.