சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தமிழில் அறிமுக இயக்குனராக அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. முதல் படத்திலேயே ஒரு இயக்குனராக இவர் வெற்றி முத்திரையை பதித்தவர். அந்த படத்தில் ஒரு குணசித்திர வேடத்தில் நடித்து பாராட்டையும் பெற்றார்.
தற்போது அபிஷன் கதாநாயகனாக நடித்துள்ள படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இதை சவுந்தர்யா ரஜினி மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகளை அபிஷன் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.