இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛பேபி'. விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் வேதரகொண்டா நாயகனாகவும், வைஷ்ணவி சைதன்யா நாயகியாகவும் நடித்தனர். சாய் ராஜேஷ் நீலம் இயக்கினார். சின்ன பட்ஜெட்டில் உருவாகி பெரிய லாபத்தை தந்தது. இதன் ரீ-மேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தமிழ் உரிமையை ஞானவேல் ராஜா வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது ஹிந்தியில் இந்தப்படம் ரீ-மேக் ஆக உள்ளது. மறைந்த நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்தியிலும் சாய் ராஜேஷே இயக்க உள்ளார். மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.