குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது |

'தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவரும், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளிலும் ஒருவர் கங்கனா ரணாவத். லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த தொகுதியான மாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனாவின் மொத்த சொத்து மதிப்பு 91 கோடி ரூபாய். அதில் அசையும் சொத்துகள் 28.7 கோடி, அசையா சொத்துகள் 62.9 கோடி. அதே சமயம் 17.38 கோடி ரூபாய்க்கு தனக்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
3.91 கோடி மதிப்புள்ள ஒரு பி.எம்.டபிள்யு, இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வைத்துள்ளார். 21 லட்சத்திற்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். 5 கோடி மதிப்பிற்கு தங்கம், 50 லட்ச ரூபாய் மதிப்பில் 60 கிலோ வெள்ளி, 3 கோடி மதிப்பில் 14 கேரட் வைர நகைகள், மும்பை பாந்த்ரா, சண்டிகர் சிர்காபுர், மணாலி ஆகிய இடங்களில் வீடுகள் இருக்கிறது. பாந்த்ரா அபார்ட்மென்டின் மதிப்பு 23.98 கோடி, மணாலி வீட்டின் மதிப்பு 4.97 கோடி.
இத்துடன் தன் மீது 8 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், அதில் 3 வழக்குகள் மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பதியப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். 50 எல்ஐசி பாலிசி வைத்துள்ளதாகவும், சண்டிகரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளதாகவும் அவரது அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா போட்டியிடும் மாண்டி தொகுதியில் ஜுன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. “பாலிவுட்டில் வெற்றி பெற்றது போலவே அரசியலிலும் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்,” என வேட்பு மனு தாக்கல் முடிந்த பின் தெரிவித்துள்ளார்.