ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
உடல் ஆரோக்கியத்தை காக்கும் யோகாசன முறைகளை, வீடியோவில் வெளியிட்டு புகழ் பெற்ற பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி,தற்போது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனராகவும் உள்ளார்.இதுதவிர, யோகா பயிற்சி மையங்கள், அழகுநிலையங்கள் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார். தற்போது, புதிதாக ஒரு, ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்."மக்கள் சந்தோஷமாக வாழ, நானும்ஒரு கருவியாக இருக்கவே, இந்தத் துறைக்கு வந்தேன் என்று கூறும், ஷில்பா, "அவரவர் வசதிக்கேற்ப தரமானகட்டடங்களை கட்டிக் கொடுத்து, அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவேன். ஆண்களே கோலோச்சும், இந்த கட்டுமான துறையில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பேன் என்கிறார்.