ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் கார்த்தி நடிப்பில் சிவா இயக்கிய படம் சிறுத்தை. இந்த படத்தை ரவுடிரத்தோர் என்ற பெயரில் இந்தியில் அக்ஷய்குமாரை வைத்து ரீமேக் செய்தார் பிரபுதேவா. படம் தமிழைக்காட்டிலும் இந்தியில் சூப்பர் ஹிட்டாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதனால் அதையடுத்து அக்ஷய்குமாருக்கு தமிழ் ரீமேக் படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகமானது.
இந்நிலையில், தற்போது தமிழில் விஜயகாந்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறார் அக்ஷய்குமார். இப்படத்தையும் ஒரு தமிழ் இயக்குனரே இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று ஜெயம் ராஜாவிடம் பேசி வந்தனர். ஆனால் அவர் மறுத்து விடவே இப்போது வானம் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கிரிஷ் அந்த வாய்ப்பினை பெற்றுள்ளார். கப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி ரமணா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறதாம்.